கொல்லிகளை தவறான முறையில் பயன்ப்படுத்துதல்
  
Translated

ரும்பாலும், ஒரு மருத்துவக் காரணம் இல்லாமல் கொல்லிகளை முறையற்ற வகையிலும், தவறான முறையிலும், அளவற்றதாக அடிக்கடி பயன்படுத்துவதால் உடல் நலத்திற்குக் கடுமையான எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகிறது.

 

“பரந்த அளவிலான கொல்லிகள் ஒரே சமயத்தில் நுண்ணுயிரிகளைக் கொன்றுவிடும். ஆனால், தேவைப்படாதபோது கொல்லிகளைப் பயன்படுத்துவது தவறான முறையாகும்.”

 

“சாதாரண தடிமன் மற்றும் சளிக்காய்ச்சல் போன்ற தீநுண்மங்களால் உண்டாகும் நோய்களுக்குக் கொல்லிகளைத் தவறாகப் பயன்படுத்துவதால், சமூகத்திற்கு தீங்கு விளைகிறது.”

 

“கொல்லிகளைத் தவறாகவும் அளவுக்கு மீறியும் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது எளிதான செயல் அல்ல.”

 

“நுண்கிருமிப்பிணி தடுப்பிற்கும் கட்டுப்பாட்டிற்கும் கொல்லிகளைத் தவறாகவும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதாலும் நுண்ணுயிரிகள் கொல்லிகளை எதிர்க்கும் திறனை விரைவாக அடைகின்றன.”

 

Learning point

கொல்லிகளைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறீர்களா?

 

கொல்லிகளைத் தவறாகவும் அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தினால் தீங்கு விளைவிக்கும். சாதாரண தடிமன் மற்றும் சளிக்காய்ச்சல் போன்ற தீநுண்மங்களால் உண்டாகும் நோய்களுக்குக் கொல்லிகள் பயன்படாது. மேலும், இப்பயன்பாட்டினால் ஆபத்தான பக்க விளைவுகள் ஏற்படலாம்.

 

கொல்லிகளைத் தவறாகவும் அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்துவதால் நுண்ணுயிரிகளைக் கொல்ல முடியாமல் போகின்றது. இதற்கு முக்கிய காரணம் நுண்ணுயிரிகள் கொல்லிகளை எதிர்க்கும் உயிரினங்களாக மாறிவிடுகின்றன. கொல்லிகளை எதிர்க்கும் திறனைக்கொண்ட நுண்ணுயிரிகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் நுண்கிருமிப்பிணியைக் கொடுக்கலாம்.

 

கொல்லிகளை எப்படி தவறாக பயன்படுத்துகிறார்கள்?

 

1. சாதாரண தடிமனக்கும் சளிக்காய்ச்சலுக்கும் கொல்லிகளை உண்பது.

2. மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகள் ஆகியோரின் பரிந்துரை இல்லாமல் கொல்லிகளைப் பயன்படுத்துவது.

3. ஒரு சுகாதாரப் பணியாளரின் பரிந்துரைக்கு எதிராக கொல்லிகளைக் கேட்பது.

4. பரிந்துரைக்கப்பட்ட கொல்லிகளை முடிக்காமல் விடுவது.

5. கொல்லிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.

6. மற்றவருடைய எஞ்சிய கொல்லிகளைப் பயன்படுத்துவது.

 

உங்களலால் என்ன செய்ய முடியும்?

 

1. சாதாரண தடிமனும் சளிக்காய்ச்சலும் வந்தால் கொல்லிகளைப் பயன்படுத்தாதீர்.

2. மருத்துவர்களாலும் சுகாதார அதிகாரிகளாலும் பரிந்துரைக்கப்பட்ட கொல்லிகளைப் பயன்படுத்தவும்.

3. கட்டாயமாக, "இந்த நோய்க்கு இக்கொல்லிகள் பரிந்துரைக்கப்படுகின்றனவா?" என்று கேட்கவும்.

4. பரிந்துரைக்கப்பட்ட கொல்லிகளை முடிக்காமல் விடாதீர்.

5. உங்கள் உடல் நிலை சரியாகி விட்டாலும், பரிந்துரைக்கப்பட்ட கொல்லிகளை முழுமையாக முடிக்கவும்.

6.கொல்லிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

7. மற்றவருடைய எஞ்சிய கொல்லிகளைப் பயன்படுத்தாதீர்.

 

கொல்லிகளை எப்படி தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு உதாரணங்கள்?

 

1. ஒருவேளை நான் கொல்லிகளை எடுத்துக் கொண்டால் நல்லது அல்லவா?

பதில்:   தவறு

காரணம்: சாதாரண தடிமன், சளிக்காய்ச்சல் போன்ற நோய்கள் தீநுண்மங்களால் உண்டாகும் நோய்கள். இவை நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள் அல்ல. பெரும்பாலான கடுமையான வயிற்றுப்போக்கு நுண்ணுயிரிகளால் ஏற்படாது. கொல்லிகளை மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகள் ஆகியோரின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்துவதால் பக்கவிளைவு ஆபத்தை உங்களுக்கு ஏற்படுத்துகிறது. மேலும், இது கொல்ல கடினமான நுண்ணுயிரிகளை உருவாக்க உதவுகிறது. கொல்லிகளை எதிர்த்துப் போராடும் திறனைக் கொண்ட இந்நுண்ணுயிரிகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் தொற்றுநோயை உண்டாக்கலாம்.

 

2. முன்பு என் சளிக்குக் கொல்லிகளைச் சாப்பிட்டேன். எனக்கு விரைவாகக் குணமாகிவிட்டது. அடுத்து, எனக்குச் சளி பிடித்தால் கொல்லிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளேன்.

பதில்:   தவறு

காரணம்: சாதாரண தடிமன், சளிக்காய்ச்சல் போன்றவை தீநுண்மங்களால் உண்டாகும் நோய்கள். பெரும்பாலானோர் 7முதல் 10 நாட்களுக்குள் குணமடைகிறார்கள். நீங்கள் கொல்லிகள் உண்ணாமலே குணமாகி விடுவீர்கள். கொல்லிகள் தீநுண்மங்களை அழிப்பது இல்லை. உங்களைச் சீக்கிரமே குணமாக்கவோ அல்லது விரைவாக வேலைக்குத் திரும்பவோ உதவாது.

 

3. முன்பு நான் கொல்லிகளைச் சாப்பிட்டப் போது பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. அதனால், இப்பொழுது நான் கொல்லிகளைச் சாப்பிட்டால் பக்க விளைவுகள் எதுவும் வராது இல்லையா?

பதில்:   தவறு

காரணம்: கடைசியாக நீங்கள் கொல்லிகளைச் சாப்பிட்டப் போது பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லையானாலும் அடுத்த முறை ஏற்படலாம். கொல்லிகளை அடிக்கடி பயன்படுத்துவதால் பக்க விளைவுகளின் ஆபத்தை அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு மற்றும் யோனி காடிப்பிணிகளை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளன.

 

4. என் உடலில் உள்ள நுண்ணுயிரிகள் ஒரு கொல்லிக்கு எதிர்ப்பை ஏற்படுத்தினாலும், அடுத்த முறை அந்த நுண்ணுயிரே என்னைத் தாக்கும் போது மேலும் பலமான கொல்லிகளை வாங்கலாம்.

பதில்:   தவறு

காரணம்: நிறைய நுண்ணுயிரிகள் இப்போது பல கொல்லிகளை எதிர்க்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. உண்மையாகவே சொல்லப் போனால் சில நுண்ணுயிரிகளால் வரும் பிணிகளைத் தற்போது பயன்பாட்டிலிருக்கும் எந்த ஒரு கொல்லிகளாலும் தடுக்க முடியாது. கொல்லிகளைத் தவறாகவும் அளவுக்கு மீறி பயன்படுத்துவதாலும் எல்லா மருந்துகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் நுண்ணுயிரிகளால் பாதிக்கப்படும் ஆபத்து அனைவருக்கும் உள்ளது.

 

5. என் உடலில் உள்ள நுண்ணுயிரிகள் கொல்லிகளை எதிர்க்கும் சக்தியை அடைந்து என்னைத் தொற்றினாலும், அது என்னை மட்டுமே பாதிக்கும். நான் வேறு யாருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை.

பதில்:   தவறு

காரணம்: உங்கள் உடலில் வளர்ந்த கொல்லிகளை எதிர்க்கும் சக்தியைக் கொண்ட நுண்ணுயிரிகள் உங்களுக்குத் தீங்கு விளைவிக்கும். பின்னர், இவை உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றவர்களுக்கும் பரவுகிறது. கொல்லிகளைத் தவறாக பயன்பாடுத்தினால் எல்லோருக்கும் தீங்கு விளையும்.

 

 

Related words.
Word of the month
New word